Friday, 21 August 2015

Did You Ask Surity




Did You Ask Surity












ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.
ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டுகேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?”
அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”
“அடமானமாய் என்ன தருவீங்க…?”
ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன..?”.
“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”
ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.
ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.
சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.
ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”
அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.
ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.
“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.
ராக்கேஷ் யோசித்தான். ‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.
ஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.
ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.
கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.
“அடமானமாய் என்ன தருவீங்க…?”.
Watch Closly

Bite


























ஒரு மனிதனை பாம்பு கடித்து
விட்டால் அவர் இரத்த
ஓட்டம்,இருதயம் செயல் இழக்க
எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு
கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர்
உடம்பில் உயிர் இருக்குமா ? அவர்
மீண்டும் உயிர் பெற முடியுமா ?
சித்த வைத்தியத்தால் முடியும்!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள்
டாக்டரிடம் சென்று காட்டும் போது
அவர் இறந்து விட்டார் என்று சொல்லி
விட்டால் நீங்கள் பயப்பட தேவை
இல்லை. பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம்
துடிப்பு நின்று விடும் ஆனால்
உடலில் உயிர் மட்டும் இருக்கும்
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா
என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு
பக்க காதில் எண்ணெய் உற்ற
வேண்டும் எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து
விட்டார் என்று அர்த்தம் மறு பக்க
காதில் எண்ணெய் வரவில்லை
என்றால் அவர் உடப்பில் உயிர்
உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு
கருஊமத்த இலையை அரைத்து
மூக்கில் 3&5 சொட்டு விடவும்
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி
விடும்.
PLEASE SHARE FRIENDSSSS

Wednesday, 22 July 2015



சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !
https://www.facebook.com/groups/siddhar.science/
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,
தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
============
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்):
=================
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
நீர்:
==
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்:
=====
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி:
====
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்:
=======
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்:
==========
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்:
=======
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
*********************************
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...
அருமை நண்பர்களே !...
இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .



கட்டாய பண வசூல் !
 ஹெல்மெட் போடாதவர்களை வழி மறைத்தும், தாவி பிடித்தும் கட்டாய பண வசூலில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார்.







‪#‎ஒரு_மருத்துவர்‬, நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக்
கண்டதும் கோபமாக,
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?"
என்று கதறினார்.
மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள்,
நான் மருத்துவமனையில் இல்லை...
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால்
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்"
என்று கூறினார்.
"பொறுமையாக இருக்கவா?"
அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன்,
"உங்கள் மகன்
இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால்
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா?
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.
மருத்துவர் சிரித்த முகத்துடன்,
"எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம்,
நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.
"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.
அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்,
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்"
என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்"
என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.
சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம்,
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா?
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?"
என்று நொந்துகொண்டார் தந்தை.
அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க,
"அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...
இன்று,
அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்...
உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்
என்று அழைத்தவுடன்
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்"
என்று கூறினாள்.
‪#‎நீதி‬:
எவரின் மனநிலையையும்
நாமே தீர்மானிக்கக் கூடாது,
அவர்கள்
வாழ்க்கையைப் பற்றியும், மனோநிலையைப்
பற்றியும்
நாம் அறிந்திருக்காதவரை!!
"நம் வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் கற்பனையானவை...
மீதி பிரச்சினைகள் தற்காலிகமானவை..."
இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமாக இருக்க போவதுமில்லை...
பின்பு ஏன்...???
((( குறிப்பு : இதை நீங்களே முடித்து வையுங்கள்.!!! )))

Wednesday, 11 February 2015

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.

ஆ......ஆ....................................ஆ.........................................