Friday, 6 February 2015

இராமநாதபுர மாவட்ட செய்திகள்

இராமநாதபுர மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் கண்டிப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் படித்துப் பகிர்க....
இராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் தான்.. ஆனால் இங்கே தங்க நகை விற்பனையும். நகை கடைகள் துணிகடைகளும் அதிகமாக உள்ளன.
இதற்கு காரணம்..
நம் மாவட்டத்தினர் தன் குடும்பம் மறந்து வறுமை நினைந்து படிக்காதவர்கள் அயல்நாடுகளில் கூலிகளாகவும் படித்தவர்கள் தகுதிகளுக்கு ஏற்ப வேலை பார்த்து வருகின்றனர்.
இராமநாதபுரத்தில் உள்ளவர்கள் அயல் நாடுகளுக்கு செல்ல மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு செல்லவில்லை எனில் இவை இரண்டும் மூடப்படும் நிலை கூட வரும் என்பதில் ஐய்யமில்லை...
அத்தகைய அளவுக்கு இராமநாதபுரம் மாவட்ட மக்களில் பாதி பேருக்கு மேல் அயல்நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்...
குட்டி சிங்கப்பூர் என்றழைக்கப்படும் கீழக்கரையும் இராமநாதபுரம் மாவட்டம் தான்... இங்குள்ள மக்கள் உலகின் எல்லா இடங்களிலும் உள்ளார்கள்...
மேலும் இது போல பல கிராமங்கள் உள்ளன .
அயல்நாட்டில் உள்ளவர்களில் 10பேரில் 5பேர் நமது மாவட்ட நண்பர்கள் தான் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அவர்களின் அலைச்சலை போக்கவும்.. வசதிக்காகவும் இராமநாதபுரத்திலயே விமான நிலையம் அமைய வேண்டும்..
மேலும் இங்கு விமான நிலையம் அமைந்தால் இராமேஸ்வரம் வரும் உள்நாடு வெளிநாடு சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை...
இது நடைபெற இராமநாதபுரத்திலயே விமான நிலையம் அமைய வேண்டும்..
இதற்கு இந்திய அரசு தலை சாய்க்க வேண்டும்.. இத்தகு செய்தியை மத்திய அரசிடம் கொண்டு சோர்ப்பது நமது கடமை... இச்செய்தியை பகிர்வதன் மூலம் கண்டிப்பாக இந்திய அரசிடம் கொண்டு செல்லப்படும் என நம்புவோம்...
இப்படிக்கு,
அ.சரத் குமார்

No comments:

Post a Comment